பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக கூறியே ஆட்சியை கைப்பற்றினார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்; பல கோடி ஊழல் மோசடிகளை செய்தவர் என குற்றம் சுமத்தப்படுகின்றது
மோசடி மிக்க நபரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்தமையானது ஜனாதிபதி அனுரவின் கருத்தை அல்லது அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்