தாயின் மூன்று கை விரல்களை இழுத்து கட்டையொன்றில் வைத்து துண்டித்த சம்பவமொன்று தென்னிலங்கையின் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது
தாயின் மூன்று விரல்களையும் மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து துண்டித்த பின் சொந்த சகோதரியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளாhர்
மகனால் தாக்குதலுக்கு இலக்கான தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின் தாயார் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர்
சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை நடத்திய போதும் தாக்குதலுக்கான காரணத்தை சந்தேக நபர் வெளியிடவில்லையென பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன