ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கமே கொழும்பு பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பேரணியாகச் சென்றனர்
பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை ஒடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.