இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது.
அம்பேத்கர் பற்றிய பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 38 தலித் எழுத்தாளர்கள் அந்த புத்தகத்தில் தங்களது பங்களிப்பை கட்டுரைகளாக வழங்கி இருக்கிறார்கள்.
அம்பேத்கர் பற்றிய அந்த புத்தகம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா எதிர்வரும் வருகிற 6-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் வெளியிடுவார் என்றும் விஜய் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் விஜயும், திருமாவளவனும் பேசுவார்கள் என்றும் தகவலகள் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேச இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.
அம்பேத்கரை ஏற்கனவே கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக விஜய் ஏற்பதாக விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.