தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராகத் சர்வதேச விசாரனைகள் தேவையென எனச் கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலிறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது தொடர்பில் எழுப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் போதே பியெர் பொலிவ்ர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் செயற்பட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி தமிழினப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.