தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அலுவலர்களுடன் நேற்று (28) ஜனாதிபதி சந்திப்பொன்றை நடத்தினார்
டைமுறையில் உள்ள கொள்முதல் சட்டம் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்
கொள்முதல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் உள்ளதால் நாட்டிற்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர்
இதனால் நாட்டில் மோசடி மற்றும் ஊழலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆனைக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.
கொள்முதல் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய தாமதங்கள், வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகள் மற்றும் செயற்திறன் இன்மை குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொள்முதல் ஆணைக்குழுவினர் மேலும் அதிகாரங்கள் தந்தால் மட்டுமே ஊழல்களை கட்டுப்படுத்த முடியுமென ஆனைக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரியப்படுத்தினர்