நடப்பு வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது
அதன் அடிப்டையில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம சேவை அதிகாரிகள், 3 நீதிபதிகள், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவர்.
நடப்பு ஆண்டில் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
56 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.