யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15) அதிகாலை 3 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்ட நிலையில், மிதவை படகில் புத்த சமய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில் குறித்த மிதவை படகை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்>அவசரமாக கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு..!