பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ஓட்டங்கள் அடித்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆரம்பித்தது
அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது
பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை கொய்தெடுத்தார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
.இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ஓட்டங்கள் இலகாக நிர்ணயம் செய்யப்பட்டது.
வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளித்து.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வந்த வேகத்திலேயே திரும்பினர்.
சல்மான் அகா மட்டும் நிதானமாக விளையாடி 63 ஓட்டங்களை பெற்றார்.
இங்கிலாந்து அணி 221 ஓட்டங்களில் ஆட்டமிந்தது
எனவே பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.