Tuesday, January 7, 2025
Homeஉள்ளூர்வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது!

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது!

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள்,

விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடன் ‘உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து கிராமிய மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க.மகாதேவன் மற்றும் யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன் ஆகீயோர் சிறப்புரையாற்றினார்கள்.

கிராமிய பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அகிலன் கதிர்காமர் உரையாற்றுகையில்,

பன்மைத்துவ வருமானம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். 1977 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையானது அமுல்படுத்தப்பட்ட போது உள்ளூர் உற்பத்திகள்

குறைவடைந்து இறக்குமதிகள் அதிகரித்தமையினால் கிராமிய பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது.

கிராமிய பொருளாதாரமானது தனியே கால்நடை வளர்ப்பு துறை, விவசாயம் துறை, பனை தென்னை வள அபிவிருத்தி என பிரித்து பார்க்க முடியாது என்றும் எல்லா துறையையும் சேர்த்து தான் கிராமிய அபிவிருத்தி ஏற்படுத்தமுடியும்.

பன்மைத்துவ வருமானமானது பண அடிப்படையாகவும் பொருள் அடிப்படையாகவும் வரும் வருமானங்கள் ஆகும்.

கிராமபுறங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாரத்தை பன்முகப்படுத்தலுக்கு பன்மைத்துவ வருமானம் இன்றியமையாதது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவான பாலனாது வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆனால் தரமான பால் உற்பத்தி திறன் மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி மையங்கள் இல்லாமையினால் பெருமளவு பாலானது தென்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களினால் கொள்வனவு செய்து பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களாக அதிக விலையில் மீளவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது

வடபகுதியில் தனியார் நிறுவனங்களினால் 160 தொடக்கம் 170 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் பாலானது பதப்படுத்தப்பட்ட பெட்டி பாலாக 580 ரூபாய்க்கு நவீன அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

இச் செயற்பாட்டு பொறிமுறையில் யாருடைய உழைப்பு யாருடைய இழப்பு யாருக்கு இலாபம் என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

அதேவேளை பால் உற்பத்தியின் தன்னிறைவான இறைமையை பற்றிய விளக்கிய அகிலன் கதிர்காமர் பால்சார் உற்பத்தியில் தனியார்ஆதிக்கம் பற்றியும் விளக்கியிருந்தார்.

மேலும், உணவு இறைமையானது உணவு பாதுகாப்பில் இருந்து வித்தியாசப்பட்டது எனவும் உணவு இறைமை என்பது அந்தந்த பிரதேசத்தில் அந்தந்த மக்களுக்கு பொருத்தமான மற்றும் தேவையான உணவை அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்துவிற்பனை செய்தல்.

உணவு இறைமை உணவு பாதுகாப்பை உறுதி செய்யும்

பால்சார் உற்பத்தியில் தனியாரது ஆதிக்கமானது கிராமிய மட்டத்தில் பால் உற்பத்தியின் வளர்ச்சியிலும் தன்னிறைவான பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எமது நாட்டின் பால் இறைமையானது நியூசிலாந்தில் இருக்கின்ற தனியார் கம்பெனியிடம் இருக்கின்றது.

எமது உள்ளூர் பால்பண்ணையாளர்கள்இ கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்து பால் பெறுமதி சேர் உணவு உற்பத்திய உற்பத்தி செய்து பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி நுகர்வதற்கான ஆற்றலை வடமாகாணத்தில் உருவாக்குவதன் மூலம் வடமாகணத்தின் பால் இறைமை பூர்த்தி செய்ய முடியும்

தேசிய மட்டத்தில் சாதகமான பார்வையானது மாகாண மட்டத்திலும் கிராம மட்டத்திலும் கூட்டுறவு துறைக்கான வாய்ப்பபை தற்போது ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றமானது பல முயற்சிகளுக்கும் பல வாய்ப்புகளும் வழிவகுக்கின்றது.

சிறந்த ஒரு வருட திட்டமிடலானது பத்து வருட கால அபிவிருத்திக் வித்திடும்

பால் உற்பத்தியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது வடமாகணத்தின் பால் இறைமையை கைப்பற்ற முடியும்

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும்.

காலநிலைகளுக்கு ஏற்ப பால் உற்பத்தியானது மாறுபடும். வருடம் முழுவதும் பால் தன்னிறைவை பூர்த்தி செய்கின்ற வினைத்திறனான தரமான பலவிதமான பெறுமதி அதிகரிப்புத்து திட்டங்களை கூட்டுறவு துறையினூடாக முன்னெடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியில் நாலு தொடக்கம் ஆறு மாடுகள் வைத்திருக்கும் பண்ணியாளர்களை சிறந்தவினைத்திறனான பண்ணையாளர்கள்.

சிறு பண்ணையார்களுக்கு தேவையான உள்ளீடுகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் வினைத்திறனான பண்ணையாளர்கள் ஆக்க முடியும்.

சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான விஷேட நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களை வரவழைத்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியானது பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. இச்செற்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.

பால் பண்ணையாளர்களுக்கு உற்பத்தி செலவுகளை கணித்து நியாயமான லாபத்தில் பாலுக்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்காக நுகர்வோருக்கு கணிசமான விலைக்கு பாலானது விற்கப்பட வேண்டும் .

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது. தென் பகுதியிலிந்நது யுத்தமானது வவுனியா மன்னர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் என முன்நகர்கின்றது.

வடமாகணத்தில் பால்புரட்சியை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கங்களும் ஒரு கூட்டு இயக்கமாக இணைந்து பால் யுத்தத்துக்கு தயாராக வேண்டும் .

தற்போதைய வடமாகண ஆளுநர் நா.வேதநாயகன் கூட்டுறவின் நண்பர். இக் கலந்துரையாடலின் அடுத்த கட்ட முன் நகர்வாக கால்நடை பிரதிநிதிகளையும் கால்நடை வளர்ப்புதுறையில் தொடர்புடைய திணைக்களங்களையும் ஒன்றிணைந்து ஆளுநர் உடன் இன்னும் ஒரு கலந்துரையாடலினை ஒழுங்கமைக்க உள்ளோம் என தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் வடமாகணத்தில் தரமான பால் உற்பத்தி மையங்கள் வடக்கு கூட்டமைப்பு வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர் தலைமையிலும் அனுசரணையுடனும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோளை முன் வைத்தார்.

யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன் கால்நடைகளை வளர்ப்பதற்கு பண்ணையாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் கால்நடை தீவனப் பிரச்சினைகளுக்காக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை உற்பத்தி நடவடிக்கைகள் வங்கியானது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்> சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்: ஆரம்பமாகவுள்ளது

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments