வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது
இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஸ்; பங்கேற்றிருந்தார்.
இதன்போது இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இந்தியர் முன்னெடுத்துள்ள மற்றும் முன்னெடுக்கவுள்ள நலத் திட்டங்களுக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றி தெரிவித்தார்
இதையும் படியுங்கள்>பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பிரச்சினையில்லை –பொலிஸார்