இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது.
இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் வரை உள்ள நிலையில் காசாவில் ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேதன்யாகுவை கண்டித்து பேரணி நடத்தினர்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர்,
ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இதையும் படியுங்கள்>தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்து:179 பேர் பலி