Thursday, January 2, 2025
Homeகனடாபொதுமக்களின் உதவியை நாடியுள்ள கனேடிய பொலிஸார்!

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள கனேடிய பொலிஸார்!

ரொறன்ரோ நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்

பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் ஒளிப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

5 அடி 6 அங்குலம் உயரத்தைக் கொண்ட குறித்த பெண் குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிசாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

43 வயதான மேகன் கூடே என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த பெண்ணுக்கும் சம்பவத்தில் காயம் அடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்>அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments