Sunday, December 29, 2024
Homeஉள்ளூர்இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முயல்வேன்- - அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முயல்வேன்- – அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில்; இந்தியாவுடன் பேசுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை இன்று (28) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு மேலதிகமாக கட்டாயமாக நான் பேசுவேன். சட்டங்களை இயற்றக்கூடிய பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது.

எங்களது கடல் எல்லைகளை பாதுகாப்பது தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கான வலு தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை இருப்பதன் காரணமாக இந்த விடயம் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து போகுமா என்பது கேள்விக்குறி.
ஆனால், யாழ்ப்பாண மீனவர்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு வாழ்வாதார பிரச்சனை ; இந்திய அரசாங்கத்துடன் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் கருத்துக்களை முன்வைப்பேன் ; என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments