2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்
அந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடினர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதில் தலையீடுகள் இருக்கின்றன எனவும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் கல்விப்புலத்திலுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.