13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய தாகும்.
சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தி யாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடனபடிக்கை பொருத்த மற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறுவிடயம்.
நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவை கண்டறிய முடியும்.
ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும் பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத் தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு நடக்கமுடியும் ?
அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக்கூட ஒருபோதும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.