தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினாவில் கடந்த 20-ந்தேதி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உணவுத் திருவிழா தொடங்கியது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முழுக்க முழுக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கைப்பட சமைத்து வழங்கும் உணவுகளே இங்கு விற்பனை செய்யப்பட்டது.
உணவுத் திருவிழாவில் ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, தருமபுரி ரவா கஜூர், சாமை வெண்பொங்கல், தினை இனிப்பு பொங்கல், கிருஷ்ணகிரி கம்பு பாயாசம், ஈரோடு அடை அவியல், சேலம் தட்டு வடை, கார பொறி, சிவகங்கை நெய் சாப்பாடு- சிக்கன் கிரேவி, வேலூர் ராகி புட்டு, ராகி கொழுக்கட்டை, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, கன்னியாகுமரி பொரிச்ச பழம், கிழங்கு மீன் கறி உள்ளிட்ட உணவு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.
மொத்தம் 286 வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.
உணவுத் திருவிழா டிக்கெட் விற்பனை செய்யுமிடத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று சென்றனர்.
உணவு வழங்கும் அரங்கிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் வாங்கி விரும்பி சாப்பிட்டனர்.
இந்நிலையில் மெரினாவில் கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினரின் 1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள், உணவுகளை வாங்கி உள்ளனர்.
45 அரங்கங்களில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள், ஆயத்த உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.