யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வேலணை, கோப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் மருதங்கேணி ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைக்கு அமைய,
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட ரீதியில் அனுமதிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட காணிப் பயன்பாட்டு உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்>மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!