Tuesday, December 24, 2024
Homeஇந்தியாகுவைத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி!

குவைத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார்.

அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார்.
மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மருத்துவ விடுமறை எடுக்குறீங்களா சார் என கேட்டார்.

இதற்கு பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார்.

அத்துடன் உரையாடலின்போது தான் தமிழர் என மோடியிடம் ஒருவர் தன்னை அறிமுகப்டுத்திக்கொள்ளவே உடனே அவரிடம் வணக்கம் என மோடி தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.

குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.

தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்> ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

https://www.youtube.com/@pathivunews/shorts

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments