ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பெறுப்பில் இருந்த பேரூந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார்.
மேலும், ஓட்டுனர் பாதுகாப்பு பட் அணியாததுடன், பல இரும்பு சாதனங்கள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்ததால், விபத்து காரணமாக பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்திருந்தனர்
மேலும், பேருந்தின் இருக்கைகள் தரமான முறையில் பொருத்தப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக மோட்டார் பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் எந்தவிதமான உபகரணங்களையும் பொருத்த அனுமதிக்க வேண்டாம் என்றும், பொருத்தப்பட்ட உபகரணங்களை அகற்றுமாறும் தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து பொலிஸ்ஸாடிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் தகுதியற்ற பேரூந்தை பயன்படித்தியமை தொடர்பில் பேரூந்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இதையும் படியுங்கள்> மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!
https://www.youtube.com/shorts/Dk9sseqIS34?feature=share