யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது.
எனினும் தற்போது மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது.
எனவே யாழ்ப்பாணத்தைத் தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு யாழ் மக்களிடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அடுத்த வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைப்பெற்றால் அதன் பின் மக்கள் ஆட்சி என்பதால் அதற்கு முன் மத்திய அரசு உள்ளுராட்சி மன்ற வைப்பு நிதியில் ( மக்கள் வரிப்பணம்) கை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது