Monday, December 23, 2024
Homeஇந்தியாதி.மு.க. தலைமை செயற் குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைப்பெற்றது

பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ; கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார்.
இதையடுத்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிர்ப்பு, அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதன்பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை.

திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது.
நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது.

2026 சட்மன்ற தேர்தலில் 200 இல்லை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி என்று தெரிவித்துள்ளார்

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பது தான் நம்முடைய இலக்கு.
200 தொகுதிகளில் நம்முடைய கூட்டணி வெல்லும்.
2026-ல் வெற்றி திமுகவுக்கு தான் என தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்>ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்!

https://www.youtube.com/@pathivunews/shorts

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments