Monday, December 23, 2024
Homeஉள்ளூர்அனலைதீவையும் அபிவிருத்தி செய்வதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

அனலைதீவையும் அபிவிருத்தி செய்வதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் அனலைதீவும் அபிவிருத்தி செய்யப்படுமென பிரதேசவாழ் மக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
அதன்போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்துக்கூறப்பட்டது.

அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தாம் அறிந்துவைத்துள்ளதாகவும், குறிப்பாக மின்சாரம், படகுப் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால், அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு அப்பகுதி அபிவிருத்தி செய்யப்படுமென பிரதேச வாழ் மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

 

 

 

 

 

இதையும் படியுங்கள்>கொழும்பை வந்தடைந்த சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவக் கப்பல்!

https://www.youtube.com/shorts/OGCSXSaXWWU?feature=share

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments