Monday, December 23, 2024
Homeஉலகம்உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா  பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்ஃகேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும்,
உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன.
கட்டிடங்களில் தீ பற்றி எரிந்ததில் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

தீப்பற்றிய கட்டடத்தில் அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

இருப்பினும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உக்ரைன் தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் சேதமடைந்ததாக உக்ரைனின் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் மைகோலா டோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் ஏவுகணை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட உக்ரைனின் SBU பாதுகாப்புப் படையின் கட்டளை மையத்தை வெற்றிகரமாகக் குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்>தலித் மாணவர்களுக்கான அம்பேத்கர் உதவித்தொகை திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments