புதிய ஜனநாக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், அடுத்த மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் அடுத்த பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.
அவ்வாறு தேர்தல் நடைபெற்றால், தேர்தலில் ஆளும் ட்ரூடோவின் லிபரல் கட்சி படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜக்மீத் சிங் நேற்று இது தொடர்பாக வெளியிட்ட கடிதத்தில், ஒரு பிரதமராக, மக்களுக்காக பணியாற்ற வேண்டிய பிரதமர் அதில் தோற்றுவிட்டார் என தெரிpவத்துள்ளார்
ஆக, ஜக்மீத் சிங் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமானால், அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் கனடாவில் ட்ரூடோ அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.