பாராளுமன்ற நுழைவாயிலில் ராகுல் காந்தியை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த மோதலில இரண்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ; காயம் அடைந்தனர்.
ராகுல் காந்தி தள்ளி விட்ட காரணத்தினால்தான் இரண்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ராகுல் காந்தி செயலுக்கு எதிராக முறைப்பாடு; அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்ற ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்>ஆப்பிரிக்காவில் சிடோ புயல் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு