நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரான போது, நாடே அவரைக் கொண்டாடியது.
ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser ஆகியோர் பதவி விலகிவிட்டார்கள்.
இதற்கிடையில், ட்ரூடோ மீதான கோபத்தை ஊடகங்களில் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்
பிரதமரே, நீங்கள் கனடாவைக் கைவிட்டுவிட்டீர்கள், நீங்கள் நாட்டை நாசமாகிவிட்டீர்கள், பதவி விலகுங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆக, சொந்தக் கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சியினரிடையேயும் மட்டுமல்ல, பொதுமக்களிடையிலேயும் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இதையும் படியுங்கள்>புதிய எல்லை விதிகளை அறிமுகப்படுத்திய கனடா!