முன்னாள் 6 ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களாக ஒரு ஆண்டுக்கான செலவு 1448 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட செலவினங்களை வெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள்:
மஹிந்த ராஜபக்ஷ
• முப்படை: ரூ. 328 மில்லியன்
• பொலிஸ்: ரூ. 327 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 55 மில்லியன்
• மொத்தம்: ரூ. 710 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன
• முப்படை: ரூ. 06 மில்லியன்
• பொலிஸ்: ரூ. 185 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 16 மில்லியன்
• மொத்தம்: ரூ. 207 மில்லியன்
கோட்டபாய ராஜபக்ஷ
• முப்படை: ரூ. 258 மில்லியன்
• பொலிஸ்: ரூ. 39 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 10 மில்லியன்
• மொத்தம்: ரூ. 307 மில்லியன்
ரணில் விக்ரமசிங்க
• முப்படை: ரூ. 19 மில்லியன்
• பொலிஸ்: ரூ. 60 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன்
• மொத்தம்: ரூ. 82 மில்லியன்
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
• முப்படை: செலவுகள் இல்லை
• பொலிஸ்: ரூ. 99 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 12 மில்லியன்
• மொத்தம்: ரூ. 110 மில்லியன்
ஹேமா பிரேமதாச (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி)
• முப்படை: செலவுகள் இல்லை
• பொலிஸ்: ரூ. 30 மில்லியன்
• ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன்
• மொத்தம்: ரூ. 32 மில்லியன்