வலய பாதுகாப்பு தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!
https://x.com/anuradisanayake/status/1868346547852972076/photo/3