வடக்கில் உள்ள ஒன்றரை இலட்சம் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை (10) அராலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்இ
தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலே பயணித்துக்கொண்டிருக்கின்ற மக்கள் தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான கருத்தை கடந்த மாதம் தமிழ் மக்களிடையே பரப்பி திரிந்தவர்களை மக்கள் நிராகரித்துஇ ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியத்தின் எழுச்சியை நீங்கள் முன்னெடுத்துச் செல்வதற்குஇ சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசத்தின் திரட்சியையும் இன விடுதலை வேட்கையையும் சமாந்தரமாக எங்களது அபிவிருத்தியையும் உறுதி செய்ய முடியும் என நாங்கள் இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அதுபோல வடக்கு மாகாணத்தில் பிரதான தொழிலாக கருதப்படுகின்றஇ ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட கடல் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற பாரிய பிரச்சினைகளை நாங்கள் நிச்சயமாக தீர்த்து வைப்போம்.
குறிப்பாகஇ 1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பதினாறு தொழில்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த தொழில்கள் இலஞ்சம்இ ஊழல்இ புறந்தள்ளல்இ தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக அந்தத் தொழில்களை அனுமதித்துக்கொண்டுஇ எமது மீனவர்களது வாழ்வாதாரத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றதை தடை செய்வதற்கு வழி வகுப்போம்.
அதேபோல 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் இழுவைமடி படகுகளை தடை செய்கின்ற சட்டத்தையும் இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்தவும்இ எங்களுடைய மீனவர்கள் எதிர்கொள்கின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளையும்இ நீண்ட கால பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.
இது நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான ஒரு விடயமாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம் என்றார்.