Tuesday, December 24, 2024
Homeசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார்

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

தற்போதைய சபாநாயகர் அசோக ரன்வல கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்ட போதும் தன்னை கலாநிதி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஆனால் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.எஸ்.சி. பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களிடம் இருந்து ஆட்சேபனை எழுந்த சந்தர்ப்பத்திலும், இது தொடர்பான தகவல் கேட்ட போது மௌனம் காத்து, உண்மையை மறைத்துள்ள காரணங்களினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை 3ஆவது பகுதியில் பிரிவு 6 இன் பிரகாரமும், அந்த நடத்தைக் கோவையின் 5ஆவது பிரிவின் நெறிமுறைகளின் பிரகாரம் உள்ள நடத்தை விதிகளின்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மீறப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்றம், அரசியலயைப்பு மற்றும் அவரால் நேரடியாகத் தலைமை தாங்கப்படும் ஏனைய உயரிய நிறுவனங்களினதும் நம்பிக்கையை மீறியுள்ளமை என்பவற்றால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments