அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி அரசின் பங்குதாரர்களாக கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்
தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
;.