எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதையும் படியுங்கள்> பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
அத்தோடு பெறுமதி சேர்க்கும் உற்பத்திகளுக்கு நாட்டு அரிசியைப் பயன்படுத்துவதால், நுகர்வுக்குத் தேவையான இருப்புகளில் தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
உர மானியத்தைத் தேசிய உற்பத்திக்கான செயல்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில் QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.