பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்> மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இது தொடர்பான விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
இதேவேளை, 10வது பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது.