Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.

அம்பாறையில் தமிழ் தேசிய கட்சிகள் உட்பட பல சுயேட்சைக் குழுக்கள் இன்று வேட்புமனுக்களை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தமிழரசுக்கட்சியினரும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை நேற்று (10) அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர்களான தவராசா கலையரன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான தமிழரசுக கட்சியினர் வியாழக்கிழமை (10) அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அத்துடன் தமிழரசுக கட்சி அணி வீடு சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments