திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்.
நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத்தமாக 7 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
பொது அமைப்புக்கள் பேராயர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுத்தோம்.
இதில் சண்முகம் குகதாசன், கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம், காலி ராஜா கோகுல் ராஜ் ஆகிய நால்வரே தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளனர்.
பலதரப்பட்ட விமர்சனங்கள் சிக்கல்களை எதிர்கொண்டு கலந்துரையாடல் ஒன்றின் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளாhர்
திருமலையில் இலங்கை தமிழரசுக் தனித்து வீட்டுச் சின்னத்தில் போட்டி – எம். ஏ சுமந்திரன்
Recent Comments
Hello world!
on