ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்
வவுனியாவை சேர்ந்த குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போது சளி கூடியதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே உயிர் பிரிந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.