இலங்கை வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது சுயாதீனமாக வெளிவிவகார கொள்கையை வடிவமைத்து அதனை பின்பற்ற வேண்டுமென என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார பிரச்சினையினை சில நாடுகள் தமது தேவைக்கு ஏற்றவிதமாக பயன்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை சுதந்திரமான வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கை மக்கள் தங்களை குறித்து நம்பிக்கை கொண்டவர்களாகயிருக்கவேண்டும், என தெரிவித்த சீன தூதுவர் சீனா போன்ற சகாக்களுடன் உறவுகளை பேணுவது குறித்து இலங்கை அக்கரை செலுத்தவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.