Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்சொந்த காசில் சூணியம் வைத்துக்கொண்ட மத்ரசா பாடசாலையின் அதிபர்

சொந்த காசில் சூணியம் வைத்துக்கொண்ட மத்ரசா பாடசாலையின் அதிபர்

அம்பாறை காரைத்தீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியரையும் கைது செய்துள்ளனர்

அத்துடன் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பேரூந்து இல்லாததால், வீதியில் நின்றுள்ளனர்

அவ்வழியே சென்ற உழவு இயந்திரத்தில் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்தியதோடு அதற்கான பணத்தையும் அதிபர் கொடுத்துள்ளார்

வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியதாக குற்றம் சுமத்தி அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்ட போதும் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments