Tuesday, December 24, 2024
Homeஉலகம்உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ,ன்று ஜநவம்பர் 25ஸ கொண்டாடப்படுவதை ஒட்டி ஐநாவின் பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் காரணமாக உள்ளார்.

இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும்.
மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர் கொலை என்றும் கணக்கில் உள்ளது.
அதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் ,ணையர் அல்லது குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும் சிறுமிகளும் ,ந்த தீவிரமான பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை நிறுவியுள்ளது.

,ந்த குடும்ப கொலைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் தங்களது இணையர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது கணிசமான எண்ணிக்கை ஆகும்.

ஆப்பிரிக்காவில் 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் 100,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என்ற விகிதங்களில் பெண்கள், குழந்தைகள் கொலையாகி உள்ளனர்.

மேலும் 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விடப் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது.
இந்த கொலைகளுக்கு எதிரான ஸ்ரீநடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறைவதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

 

https://pathivunews.com/

https://tamilwin.com/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments