அரசியல் களத்தில் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாமல் இராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
இராஜபக்ஸ குடும்பத்தினர் மீது தேசிய மக்கள் சக்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே ஆட்சியை பிடித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர்
மஹரக பகுதியில் நேற்று (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் தேர்தல் வெற்றிக்காக எவர் வேண்டுமானாலும் எதனையும் குறிப்பிடலாம் என்ற நிலைமை காணப்படுகிறது.
வரையறையற்ற வகையில் சேறு பூசல்கள் இடம்பெறுகின்றன.
தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அனைவரும் மறந்து விடுகின்றனர்.
தேர்த்ல காலத்தில் எம் மீது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை இப்போது மறுத்து வருவதாக நாமல் தெரிவித்துள்ளார்
அரசியல் களத்தில் தேர்தல் வெற்றிக்காக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் பலமான சட்டமியற்றலுக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி எம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் அநுர அரசு ஏன் எம் மீது நடவடிக்கை எடுக்காது அமைதியாக இருக்கின்றார்கள் என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்