ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (09) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இம்முறை மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய அணி சார்பாக அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 52 ஓட்டங்களையும் ஸ்மிரிதி மந்தனா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து, 173 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷா ஷோபனா மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.