கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் ‘இளம் கலைஞர்’ விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதி பகுதியில் திருகோணமலையில் குறித்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டுவருவதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சொந்த இடமாக கொண்ட தங்கவேல் சுமன் யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளராக தற்போது பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.