நல்லை ஆதீனத்துக்கு நேற்று(11) காலை சென்ற டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
சமகால நிலைவரங்கள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் கே.தயானந்தா மற்றும் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், முன்னாள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.