தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்களை தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது தொடர்பில் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்பத்தின் வகிபங்கு தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயபட்டது.