நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலை உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
பின்னர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. கட்சியின் பிரச்சனை குறித்து கருத்து கூற முடியாது.
பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும்.
ராமதாஸ் அரசியலுக்கு வரும்போது பொதுவாக தான் வந்தார்.
கடைசியாக வழி இல்லாம தான் அன்புமணியை கொண்டு வந்தார்.
நம் தமிழர் கட்சியில் தலைவர் உருவாகுவார்.
அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
நாங்கள் பார்க்கும் தலைவன் வேறு.
படம் எடுத்தால் தலைவர் என்று பெயர் போட்டுக் கொள்ளலாம்.
ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது.
140 க்கு மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது.
என் கால் படாத நீதிமன்றங்கள் இல்லை. கட்சி அரசியலும், தேர்தல் அரசியல் தான் உள்ளது. மக்கள் அரசியல் கிடையாது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் வேலை செய்யாமல் போவதற்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது.
அதற்காக சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது.
தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் இயற்ற சொல்லலாம்.
அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை என்ற சட்டத்தை அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும் என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்
இதையும் படியுங்கள்>கனடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!