டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும். முதியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கரிஸ் கட்சி தலைவர் சந்தீப் தீக்ஷித் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மியின் மக்கள் நலத்திட்டங்களை நாசப்படுத்த பாஜக, காங்கிரஸ் முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்>முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!