கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் கடும் குளிருடனான காலநிலை அவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்குமிட வசதிகள் இல்லாத ஏதிலிகள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகை காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வாழ்வது சிரமமானது என தற்காலிக தங்குமிட பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதிலிகள் தொடர்பான தன்னார்வ தொண்டர்களும் வீடற்றவர் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதையும் படியுங்கள்>கனேடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழப்பதற்கான வாய்ப்பு!