யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் 25ம் திகதியும் உயிரிழந்துள்ளனர
மூன்று மாத குழந்தை 26 ம் திகதியும் உயிரிழந்துள்ளனர்.
;பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை (26) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுபவதற்காக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது.
இதேவேளை, நான்கு நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் 34 வயதுடைய தனுசன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.