Friday, December 27, 2024
Homeஉள்ளூர்ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து  20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த நாட்டு மக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டனர்

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையால், பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

காலை 6.58 மணியளவில் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட சுனாமி அலைகளில் மிக பலமான அலைகள் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் காலை 09.26க்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையை தாக்கியது.

இந்த ஆழிப்பேரலை, இலங்கையில் சில நிமிடங்களில் 35,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்தது,

என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கூட நேரத்தை விட்டுவிடாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பெரும் சோகத்தின் மத்தியில் மறைந்த அன்பர்களின் நினைவாக ஆண்டுதோறும் மௌன அஞ்சலி இடம்பெற்று வருகிறது.
மேலும், மறைந்த தங்களின் உறவுகளை விளக்கு ஏற்றி நினைவு கூற உறவினர்களும் மக்களும் மறக்கவில்லை.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக 2 தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு உட்பட நாட்டில் சுனாமியால் பாதிக்கப்ட்ட அனைத்து இடங்களிலும் இறந்தவர்கள் நினனவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

இதையும் படியுங்கள்>மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

https://youtu.be/EoilsSuPl4g

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments